தெலுங்கானா தமிழ்ச் சங்கம்
TELANGANA TAMIL SANGAM
(Govt. Regd.781)
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்"
தோற்றம்:-
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றிட்ட சந்தத்தமிழ் சிந்திடாமல் சிதறிடாமல் காத்திட, வந்தமைந்த தமிழ்
சொந்தங்கள் அனைவரையும் சாதி/மத பேதமின்றி, அரசியல் அல்லாத, இலாப நோக்கமற்ற, வெளிப்படையான
அமைப்பாக தெலுங்கானா வாழ் தமிழர்களால், தெலுங்கானாவில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும்
“தெலுங்கானா தமிழ்ச் சங்கம்” என்ற ஒரே குடையின் கீழ் இணைப்பதற்க்கான முயற்ச்சியே நமது தெலுங்கானா
தமிழ்ச் சங்கம்.
தெலுங்கானா தமிழ்ச் சங்கம் என்பது பல ஆண்டுகளாக தமிழ் நண்பர்களாக ஒன்றிணைந்து பல்வேறு ஆக்க
பூர்வமான பணிகளை இங்குள்ள தமிழர்களுக்கு ஆற்றி வந்துள்ளது, இதனை முறைப்படி 2019-ஆம் முதல்
“தெலுங்கானா தமிழ்ச் சங்கம்" என்ற பெயரில் அமைப்பாக உருவாக்கி, தெலுங்கானா அரசால் முறைப்படி பதிவு
செய்யப்பட்டு (பதிவு எண்:781-2021) வணிக இலாப நோக்கமற்ற அமைப்பாக தமிழர்களின் பேராதரவுடன் தமது
நற்பணிகளை செய்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தை தலைமையிடமாக
கொண்டு சிறப்பிக்க செயல்பட்டு வருகிறது. உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு
பெற்றது.
தெலுங்கானா வாழ் தமிழர்கள் தொடர்ந்து நம் மொழி, கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த
தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும்
நம் சங்கம் முன்னெடுத்து வருகிறது.
சங்கத்தின் நோக்கங்களான கல்வி, சமூக நலன், கலாச்சாரம் மற்றும் ஒருங்கிணைப்பு முதலியவற்றை உள்ளடக்கிய
செயல் திட்டங்களினால் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பலன் பெற்று வருகிறார்கள்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனைகள், பயிற்சிப் பட்டறைகள், அவசரகால நிதி உதவி,
தமிழர்களை ஒன்றிணைத்தல், நட்பு வட்டம் விரிவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. உலகத்
தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
மிக எளிய முறையில் 22 அங்கத்தினர்களைக் கொண்ட அமைப்பாகத் தொடங்கப்பட்ட இச்சங்கம் தற்போது
ஏறத்தாழ 1000+ அங்கத்தினர்களைக் கொண்ட பேரமைப்பாக வளர்ந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து சங்கத்தின் இலக்குகள்
வரையறுக்கப்பட்டுள்ளது.
•தமிழ் மொழி, இலக்கியம், மரபு, பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் நுண்கலைகளை மேம்படுத்தி
மரபு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்.
•சாதி/மத பேதமின்றி தெலுங்கானா வாழ் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ்
இணைத்தல்.
•தெலுங்கானா வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட இடங்களில் நூலகம் அல்லது நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகளை நிறுவி பராமரித்தல்.
•சமூக சேவை, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது மற்றும் தொண்டு உதவிகளை வழங்குதல்.
•தமிழ்நாட்டிற்க்கு வெளியே வாழும், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தமிழர்களுக்குத் தமிழ் மொழியைக்
கற்றுக்கொடுத்துத் தமிழை தழைத்தோங்கச் செய்தல்.
செயற்பாடுகளும் எதிர்கால திட்டங்களும்:
தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு வழங்கும் தலையாய பணிகளில் ஒரு சில பின்வருமாறு:
•சமூக நலம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் துன்ப நிகழ்வுகளிலும், இக்கட்டான
சூழல்களிலும் நமது முழு ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி, ஒருவருக்கொருவர் மேலான
அன்பையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுதல்.
•கல்வி: தெலுங்கானா வாழ் தமிழ் குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் தொடர் தமிழ்
வகுப்புகளை ஏற்படுத்தி தமிழ் மொழிப் பயிற்சி அளித்து, அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றுதல்.
•ஒருங்கிணைப்பு: தெலுங்கானா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் தமிழர்கள் குறிப்பாக
புதிதாக குடியேறியவர்கள் எளிதில் சக தமிழ் மக்களுடன் இணைய வழிவகைகளை ஏற்படுத்துதல். தமிழ் மக்கள்
தங்கள் சமூக உறவுகளை மேம்படுத்த ஒரு பொதுவெளியை ஏற்படுத்தி, ‘ஒருவருக்கு ஒருவர் நன்மைகள்’ கிடைக்க
உதவுதல்.
•கலாச்சாரம் மற்றும் பண்பாடு: இயல், இசை, நாடகம் போன்ற கலை இலக்கிய நிகழ்வுகளுக்கான
வாய்ப்புகளை ஏற்படுத்துதல். பாரம்பரிய மரபு விளையாட்டுகளை ஊக்கப்படுத்துதல்.
•சமூக நலம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளை நடத்துதல் (மருத்துவ ஆலோசனை/குடி வரவு/ குழந்தை
நலஉதவி/சட்ட ஆலோசனை/ திருமண தகவல் மற்றும் மனநல ஆலோசனை).
மகளிர் பிரிவு சம வாய்ப்பும், உரிமையுமே சரியான வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை செயல்படுத்தும்
முயற்சியாக கடந்த 2022ஆம் ஆண்டு தெலுங்கானா தமிழ் சங்கத்தால் தமிழ் தாய்மார்கள், இளம் பெண்களைக்
கொண்டு மகளிர் பிரிவு சிறப்பாக தொடங்கப்பட்டது. இதன் மூலம் சங்கத்தை வலுப்படுத்தி தனித்துவ மிக்க
செயல்கள் மூலம் சங்கத்திலும், சமூகத்திலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி தலைமைப் பண்புடன் பொதுச் சமூக
பணிகளை செய்யவும் இக்குழு பல முயற்சிகளை எடுத்தது. தொடர்ச்சியாக மகளிர் தினம், நிலாச்சோறு போன்ற
நிகழ்ச்சிகளை மகளிர் அமைப்பு முன்னெடுத்தது.
இங்குள்ள பன்முகக் கலாச்சாரத்தை ஏற்று நமது கலாச்சாரத்தோடு மேலும் வளரவும், பெண்களின்
உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தலைமைப் பண்பையும் தனித் திறமைகளை வளர்க்கவும் இக்குழு
பணியாற்றுகிறது. மேலும் குடும்பம், கல்வி, உணவு, ஆரோக்கியம் போன்ற பகுதிகளிலும் சங்க உறுப்பினர்களுக்கு
குறிப்பாக பெண்களுக்கு பல நிகழ்ச்சிகளை நடத்தி, சங்க நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலோடு சிறப்பான
சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருகின்றது.
செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை, தமிழ்ச் சங்க செயல் திட்டங்களைப்
பரிந்துரைக்கும் வாய்ப்பு மற்றும் தமிழ்ச் சங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சங்க செயற்குழு பதவிகளுக்குப்
போட்டியிடும் வாய்ப்பையும் வழங்குதல்.
முத்தமிழ் வளர்ச்சி, தமிழ்க் கலாச்சாரம் பேணுதல், தமிழ்க் கல்வி மேம்பாடு, மகளிர் திறன் வளர்த்தல்,
முதியோர் நலம் பேணுதல், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை தெலுங்கானா
தமிழ்ச்சங்கம் ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறது.
உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் (வலைதளம்/ முகநூல் / வாட்ஸ் ஆப் / டிவிட்டர்) தங்களை
இணைத்துக் கொண்டு அதன் மூலம் தங்களது கருத்துக்களை மற்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்து, உரையாடுவதன்
மூலம் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்தல்.
எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினர்களின்
நெடுநாள் கனவு தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமாக இடம் கட்டடம், ஐதராபாத்தின் மையப்பகுதியில் நூலகம்
அமைத்தல்.
திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மருத்துவப் பலன்கள் திட்டத்தை வழங்குவதற்கான
கார்பஸ் நிதி விரைவில் வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
சேவைகள்:
1.
மருத்துவத்திற்கு தேவையான இரத்ததானம்
2.
திருமணவரன்
3.
விலையில்லா தமிழ் பாடநூல்கள்
4.
பராம்பரிய இயற்கை மருத்துவ ஆலோசனைகள்
5.
கட்டணமில்லா சட்ட ஆலோசனை மற்றும் உதவி
6.
சாதி சான்றிதழ் பரிந்துரைக் கடிதம் (தேவைப்படுவோருக்கு)
7.
வேலை வாய்ப்பு
உறுப்பினர் சேர்க்கை:
தமிழ்மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி, மனிதமேம்பாடு ஆகியவற்றுக்காகப் பணியாற்றிவரும் நமது தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்குடன் பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
ஒரு அமைப்பின் பலம் அதன் உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டே அளவிடப்படும். அந்த வகையில் நமது தமிழ்ச் சங்கத்தின் தொடர்ச்சிக்கும், வளர்ச்சிக்குமான மூலைக்கல்லாக இருந்து பேருதவி புரிவது நீங்கள் செலுத்தும் உறுப்பினர் கட்டணமே. இதற்குப் பிரதிபலனாக உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் நமது பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதியை வழங்குகிறோம். எனவே தயவுசெய்து உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர விரும்புபவர்கள் கீழ்க்காணும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதனை “telanganatamizhsangam@gmail.com” எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
ஒரு குடும்பத்திற்கான ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ.500/- மட்டுமே.
தங்களது உறுப்பினர் கட்டணத்தை நமது தெலுங்கானா தமிழ்ச் சங்க வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு விபரங்களைத் தமிழ்ச் சங்க மின்னஞ்சல் முகவரிக்கு/நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப் அனுப்பினால் தங்களுக்கான பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
NAME OF THE ACCOUNT: TELANGANA TAMIL
SANGAM
BANK NAME: Tamilnad Mercantile Bank
Ltd.,
ACCOUNT NUMBER: 065100140450010
BRANCH NAME: Hyderabad - Kishan Gunj
IFSC CODE: TMBL0000065
உறுப்பினர் கட்டணத்தை காசோலை, வங்கி வரைவோலையை (டிடி)
வழங்க விரும்புவோர் “TELANGANA TAMIL SANGAM” என்ற பெயரில் வழங்கலாம்.
உறுப்பினர் கட்டணத்தை கூகுள்பே GPay/UPI மூலமாக செலுத்த telanganatamilsangam@tmb செலுத்தி புதிய உறுப்பினராக/புதுப்பித்து கொள்ளவும். பணம் செலுத்திய விபரத்தை உடனே அதே எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை தெரிவித்து உரிய இரசிதை பெற்றுக் கொள்ளவும்.
நேரடியாக பணம் செலுத்தி
உறுப்பினராக விரும்புவோர்
M.K. போஸ், தலைவர், 92465 02855
(Address: M.K.Bose, DoorNo. 1_9_49/b/4,
Main Road, Ramnagar, Hyderabad-500020),
P.தருமசீலன், துணைத்தலைவர், 9849555470
(Address: P.Dharamaseelan, GHMC
No.3-5-784/2/8/A, Flat No.105, Sri Sai height apartment, King Koti, Himayat
Nagar, Hyderabad),
N. நேரு சாஸ்திரி, பொருளாளர், 94913 82827
(Address: N. Nehru Sastry, No.
2-20-2/28/1/201 Flat, No 201/ Balaji Homes Adarsh Nagar, Road No 10, Opp HP
Petrol Bunk, Uppal, Hyderabad, 500039)
தொடர்பு கொண்டு தகவல்
தெரிவித்த பின்னர் அந்தந்த முகவரியில்
சந்திக்க வேண்டுகிறோம்.
உறுப்பினர் தகுதி :-
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள், தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் உரிமை பெற தெலுங்கானா சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில் செயல்பட்டு, அங்கத்தினர் ஆவதற்கான சந்தாத் தொகையை செலுத்துதல் வேண்டும். மேற்படி சந்தாத்தொகை சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் அல்லது சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் அவ்வப்போது நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி நிர்ணயிக்கப்படும்.
நன்கொடை:
தெலுங்கானா அரசால்
முறைப்படி பதிவு பெற்ற தெலுங்கானா மாநிலத்தின் முதன்மைத் தமிழ்ச் சங்கமாகச்
செயல்பட்டு வரும் தெலுங்கானா தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி வளர்ச்சி மற்றும்
தமிழர் கலை, பண்பாடுகளைக் காக்கும் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை
நடத்தித் தெலுங்கானா மாநில மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. இச்சங்கத்தின்
செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், நன்கொடை அளிக்கவும்
விரும்புபவர்கள், தங்களால் இயன்ற தொகையினைக் கீழ்க்காணும் சங்கத்திற்கான வங்கிக் கணக்கில்
நன்கொடையாகச் செலுத்தி உதவலாம்.
இந்த வலைத்தளத்தில் “நன்கொடை செலுத்தியவர்கள் பட்டியல்” எனும் தனிப்பக்கம் ஒன்று இடம் பெற உள்ளது. எனவே, நன்கொடை செலுத்தியவர்கள், தங்கள் பெயர், முகவரி, நன்கொடைத் தொகை, வங்கியில் செலுத்திய நாள் போன்ற விவரங்களை “telanganatamizhsangam@gmail.com” எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது TELANGANA TAMIL SANGAM (Regd.) C/o.N. Nehru Shastri, GHMC No. 2-20-2/28/1/201, Flat.No.201, Balaji Homes, Adarsh Nagar, Road No.10, Opp. HP Petrol Bunk, Uppal, Hyderabad, Telangana – 500 039, Contact: 94913 82827 எனும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
சங்க நிர்வாகம்:
தெலுங்கானா தமிழ்சங்க
நிர்வாகத்தை அங்கத்தினர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்
குழுவும் மேற்கொண்டு செயற்குழு உறுப்பினர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து
வருகிறார்கள்.
நிர்வாகக் குழு:
தலைவர்: M.K. போஸ், 92465 02855,
துணைத்தலைவர்: P. தருமசீலன், 98495 55470,
பொதுச்செயலாளர்: S. ராஜ்குமார், 96522 34563,
பொருளாளர்: N. நேரு சாஸ்திரி, 94913 82827,
துணைப்பொருளாளர்: T. குமாரராஜன், 88863 08010.
செயற்குழு உறுப்பினர்கள்:
இராஜன்முத்துசுவாமி, J. S. வாசன், E. சரவணன், P. உமாகணேசன், G. செல்வகுமரன்,
T. சாந்தகுமார், V. பிரபு விஜயன், M. P. துரைசாமி, S. தெட்சிணாமூர்த்தி, G. மீனாட்சிசுந்தரம்,
R. ஜெயபால், S. அன்றோ வசந்த், S. அமலன் ஜெயந்த், K. ஜெயப்பிரகாஷ், E. ஜெகதீசன்,
M. தாமோதரன், P. இராஜேந்திரன், V.M. வேல்முருகன்.
நிர்வாக மற்றும் செயற்குழு சங்கத்தின் அடிப்படை லட்சியங்களான தமிழ் மொழி வளர்ச்சி, மற்றும் தமிழ் கலாச்சார மேம்பாட்டுக்கான பல்வேறு செயல்பாடுகளை ஆர்வத்துடன்
மேற்கொண்டு வருகிறார்கள்.
சங்கத்தின் சில
முக்கியசெயல்பாடுகள் மற்றும் சேவைகள் பற்றிய விவரங்கள் இவண் தொகுத்து
வழங்கப்பட்டுள்ளன.
Telangana Tamil
Sangam is the first ever Tamil Association started in the whole of Telangana
State. Telangana Tamil Sangam is a registered non-profit organization promoting
Culture, Art and Literature of Tamil ethnic people and charitable causes
encompassing people living in and around Telangana.
Telangana Tamil Sangam strives to raise, solicit, collect, and dispose funds and donations for charities, cultural, educational and humanitarian purposes, either directly or in cooperation with other registered non-profit organizations in the Telangana & abroad.
WE WORK FOR
>>Community,
Art, Culture, Literature
>>Charity,
Children
>>Community
outreach programs
>>Supportive and inclusive environment
All are welcome!
At TTS, we strive to create a welcoming environment for all members, including new members who are looking to connect with the Tamil community in Telangana. Our team is always available to assist and support our members, and we encourage them to participate in our events and activities to experience the rich Tamil culture.
We believe that our association plays an important role in promoting diversity and cultural understanding in Telangana, and we are committed to continuing this mission. Join us today to be a part of this vibrant community and experience the best of Tamil culture.
MEMBER BENEFITS
·
Network of
Tamil People
·
Showcase your
talents
·
Charity work
·
Women’s Wing group
·
Family group
·
Festival
celebrations
·
Free Tamil Text
Books
·
Tamil Library
·
Kids’ Arts
& Crafts
· Improve Kids Communication & Talents
Join us and Become
a Member.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------