சங்கத்தின் பணிகள் & முக்கியச் செயல்பாடுகள்:
தெலுங்கானா தமிழ் சங்கம் என்பது பல ஆண்டுகளாக தமிழ் நண்பர்களாக ஒன்றிணைந்து பல்வேறு ஆக்க பூர்வமான பணிகளை இங்குள்ள தமிழர்களுக்கு ஆற்றி வந்துள்ளது, இதனை முறைப்படி 2019ஆம் முதல் தெலுங்கானா தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் அமைப்பாக உருவாக்கி தெலுங்கானா வாழ் தமிழர்கள் தொடர்ந்து நம் மொழி, கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும் நம் சங்கம் முன்னெடுத்து வருகிறது.
2019:
செப்டம்பர் 14, 2019, தமிழ் நண்பர்கள் குழு தெலுங்கானா மாநில ஆளுநருடன் சந்திப்பு தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய மாண்புமிகு ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை ஐதராபாத் தமிழ் நண்பர்கள் குழுவினர் செப்டம்பர் 14 ம் தேதி - சனிக்கிழமை அன்று சந்தித்து ஐதராபாத் வாழ் தமிழ் மக்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து அளித்து நினைவு பரிசு வழங்கி தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஐதராபாத் வாழ் தமிழ் மக்கள் பற்றிய விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் ஐதராபாத் தமிழ் நண்பர்கள் அமைப்பின் திரு.போஸ், திரு.தர்மசீலன், திரு.நேரு, திரு.சிவகுமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
24 November 2019 - ஐதராபாத் தமிழ் நண்பர்கள் குழு முதலாவது மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி கார்த்திகை மாத வனபோஜனம் நிகழ்வாக "புறமனை விருந்து”: ஐதராபாத் தமிழ் நண்பர்கள் குழு சார்பாக முதலாவது மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி கார்த்திகை மாத வனபோஜனம் நிகழ்வாக "புறமனை விருந்து" வரும் நவம்பர் 24-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை அன்று Dholari Dhani, Kompally "தோலா – ரி – தானி" என்பது ராஜஸ்தானிய கிராம பாணியில் ஐதராபாத் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பொழுதுபோக்கு வளாகத்தில் மிகவும் சீரும் சிறப்புடன் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
29 December 2019: தெலுங்கானா தமிழ்ச் சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் அறிமுகம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.
2020: 16/02/2020, தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இன்பச் சுற்றுலா :
தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இன்பச் சுற்றுலா 16/02/2020 காலை சுமார் 5.30 மணியளவில் ஐதராபாத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நமது தமிழ் உறவுகள் மூன்று பேருந்துகளில் Kharkana விற்கு வந்து அங்கிருந்து சுமார் 7.30 மணியளவில் வாகனங்களுக்கு பூசை செய்த பின்னர் புறப்பட்டு, வழியில் காலை சிற்றுண்டியை முடித்து புறப்பட்ட நமது உறுப்பினர்கள் துள்ளல் ஆடல்பாடலுடன் இனிமையாய் தொடங்கி நடைபெற்றது.
2020: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தெலங்கானா தமிழ்ச் சங்கம்: 27/12/2020, தெலங்கானா தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டம், உறுப்பினர்கள் சந்திப்பு - 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
2021:
14/03/2021, தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் பெண்கள் தின விழா 30-05-2021, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தெலங்கானா தமிழ்ச் சங்கம்: கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, தெலங்கானா மாநிலத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் நலன் காக்கும் விதமாக தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய ஆயூஷ் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்தான கபசுர குடிநீர் பொடி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் துணை தலைவர் ஏ.கே.போஸ், தர்மசீலன், பொருளாளர் நேரு, துணைப் பொதுச்செயலாளர் ராஜ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்தனர்.ஏற்கனவே தமிழர் பாரம்பரிய மருத்துவம் - கரோனா தொற்று தடுக்கும் முறைகள் குறித்து இணையவழி கருத்தரங்கம் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் தெலங்கானா தமிழ் சங்கத்தின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
15-07-2021 - தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்
தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இணையவழி தமிழ் வகுப்புகள் தொடக்க விழா (15/07/2021) மாலை 5 மணியளவில் இணைய வழியில் (கூகுள் மீட் செயலி வாயிலாக) மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடர்ந்து தெலுங்கானா தமிழ்ச் சங்க தலைவர் போஸ் சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். ஐதராபாத் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சி மையம், சித்தாந்த வித்யா நிதி பேராசிரியர் கோ.முத்துசுவாமி, (கவிஞர் சின்மய சுந்தரன்), ஐதராபாத் நிறை இலக்கிய வட்டம், பட்டிமன்ற பேச்சாளர், தலைவர் ஸ்ரீனிவாசன், திருவையாறு ஔவை கோட்டம் மற்றும் தமிழ் ஐயா கல்வி கழக தலைவர்
முனைவர் திரு. கலைவேந்தன், கோவை வசந்த வாசல் கவிமன்ற செயலாளர் கோவை கோகுலன், அகமதாபாத் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் வாலறிவன், தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினர் தமிழ் ஐயா திரு. முத்து கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தெலுங்கானா தமிழ்ச் சங்க தமிழ் வகுப்பு ஆசிரியர் ஏற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்ச் சங்க நிறுவன உறுப்பினர் நன்றியுரையாற்றினார். முன்னதாக நிகழ்ச்சியை திருமதி அருணா குமாரராஜன் அவர்கள் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் தருமசீலன், ராஜ்குமார், நேரு சாஸ்திரி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மொழி நமது அடையாளம்! தாய்மொழி கற்பதும் காப்பதும் நமது கடமை!! தமிழை நேசிப்போம்! தமிழால் உயர்வோம்!! என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் நமது தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். சங்ககாலம் தொட்டு இன்றுவரை வாழ்க்கையின் எல்லா நிலையினருக்கும் பயன்படக்கூடிய நல்ல பல நூல்களும், இலக்கியங்களும் தமிழ் மொழியில் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றை நம் பிள்ளைகள் படித்து அறிந்துகொள்ளவும், அதுபோல் எழுதிப் பழகவும் வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தோடு நம் தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தமிழை முறையாகப் பயிற்றுவித்து வருகின்றன.
அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் நோக்கில் இணையவழி தமிழ் வகுப்புகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் தெலுங்கானா தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகள் தமிழ் கற்க ஆவன செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
15-08-2021- தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 75வது சுதந்திர தின விழா:
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத், குக்கட்பள்ளியில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் விழா அரங்கில் சுதந்திர வைரவிழா ஆகஸ்ட் 15, 2021 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஐதராபாத்தில் வாழும் தமிழன்பர்கள் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவிற்குத் தலைமை தாங்கி பேசிய தெலுங்கானா தமிழ் சங்கத் தலைவர் திரு எம்.கே.போஸ் அவர்கள்
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் குழுமியிருந்த பார்வையாளர்கள் கொரோனோ விதிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதையும் பாராட்டினார். கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி தொடங்க பெற்ற தமிழ்ச் சங்கத்தின் தமிழ் கற்றல் வகுப்புகளில் சுமார் 35ம் மேற்பட்ட மாணவர்கள் தினசரி மாலை வகுப்புகளில் பயின்று வருகின்றனர், மிக குறுகிய ஒரு மாத காலத்தில் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக அடிப்படை தமிழ் மொழியை கற்று தற்போது வார்த்தைகளை எழுதியும் வாசிக்கவும் ஆரம்பித்துள்ளனர் என்பதை இந்த விழாவில் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக தமிழ்ச் சங்கத்தின் மூலம் நடைபெற்று வருகிற தமிழ் வகுப்பு மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளை தமிழ் வகுப்பு ஆசிரியர் மற்றும் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பங்கேற்று நம் நாட்டின் சுதந்திரத் தியாகிகளை, குறிப்பாக கொடிகாத்த குமரனைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அவர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் விழாவைச் சிறப்பித்தனர். மேலும் சிறப்பு பேச்சாளர்கள் சுதந்திரத்திற்குப் பின் நம் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். பாலாஜி என்பவர் தன் உரையில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சில எளிய வழி முறைகள் குறித்து பேசினார். தொடர்ந்து கோபால கிருஷ்ணன் அவர்கள் ஒற்றுமையை குறித்து பேசினார். இந்த விழாவில் கடந்த மார்ச் மாதம் தமிழ் சங்கம் நடத்திய ‘உலக மகளிர் தின’ விழாவின் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த சுதந்திர தின வைரவிழாவிலும் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பலர் பரிசுகளை அள்ளிச்சென்றனர். தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
சங்க நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்த தி சென்னை சில்க்ஸ் நிர்வாகி மற்றும் ஊழியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை திருமதி செல்வி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முடிவில் தமிழ்ச் சங்கத்தின் துணைக் செயலாளர் குணசேகரன் தன் நன்றியுரையில் விழா சிறப்பாக நடந்தேற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி, விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப் பெற்று இனிதே நிறைவுற்றது. முன்னதாக விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள் தருமசீலன், ராஜ்குமார், நேரு, குமாராராஜன், தட்சிணாமூர்த்தி, ராஜன்முத்துசுவாமி, வேல்முருகன், செல்வகுமரன், சாந்தகுமார், சரவணன், உமாகணேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
2022 :
02-01 2022: தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழா:
தெலுங்கானா தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டு விழா, நன்னெறிச்சுடர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் கடந்த ஜனவரி 2ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவைத் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.கே.போஸ் தலைமை வகித்தார், துணைத் தலைவர் தருமசீலன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் நேரு சாஸ்திரி, துணைப் பொருளாளர் குமாரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்க துணைத்தலைவர் தருமசீலன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைவர் போஸ் தலைமை உரையாற்றினார். இந்த விழாவில் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வகுப்பு மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆத்திசூடி ஒப்புவித்த சுமார் 25 மாணவர்களுக்குத் திருவையாறு ஒளவை கோட்டம் சார்பில் நன்னெறிச்சுடர் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் அவ்வையார் வேடம் அணிந்து, ஆத்திசூடி ஒப்புவித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார் கவிதை வாசித்தல், இசை மீட்டல், கண் கவர் கலை நிகழ்ச்சிகள் என ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை வென்ற சிறுவர்கள் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நினைவு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சபையோருக்கான மனமகிழ் வினாடி வினாவில் தமிழ் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமரன், அருணாதேவி ஆகியோருக்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நன்கொடையாளர்களும் ஆண்டு விழாவில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அருணா குமாரராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு விருந்துடன் 2022 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வழங்கப்பட்டது. தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிவாஜி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
26-01-2022- தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் இணையவழி அறிமுகம்:
தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் உறவுகள் ஒருவரையொருவர் அறிந்துக் கொண்டு பண்பானவர்களின் நட்பை வளர்க்கும் வகையில்....
இணையவழி உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் 26 ஜனவரி 2022 புதன் கிழமை மாலை 4 மணிக்கு இணையவழி மிகவும் சீரும் சிறப்புடன் நடைபெற்றது.
13-03-2022 – ஐதராபாத் வருகை தந்திருந்த பேரூர் ஆதீனம் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு
'சமத்துவச் சிலை' என பெயரிடப்பட்டுள்ள ராமானுஜர் சிலை (Statue Of Equality) திறப்பு விழாவிற்கு ஐதராபாத் வருகை தந்திருந்த பேரூர் ஆதினம் (பேரூர் ஆதீனம் Perur Aadheenam, Perur Aadheenam) அவர்களை நமது தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நமது தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தை பற்றியும், அதன் பணிகளையும் ஆதினம் ஐயா அவர்களுக்கு நிர்வாகிகள் எடுத்து உரைத்தனர்.
15-08-2022: தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 76வது சுதந்திர தின விழா:
ஐதராபாத், ஆகஸ்ட் 18, 2022, தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 76வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ம் தேதி ஐதராபாத், குட்கட்பள்ளியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் விழா அரங்கில் மாலை 4 மணி முதல் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஏராளமான தமிழ் மக்கள் தங்களது குடும்பத்தினர் நண்பர்களுடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிறுவர் சிறுமியர், பெண்கள் ஆண்கள் மற்றும் தம்பதியர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன இதை செயற்குழு உறுப்பினர் திரு. செல்வக்குமரன் மற்றும் திருமதி.செல்வி, திருமதி வசுதா மோகன் அவர்கள் ஒருங்கிணைந்தனர்.
குத்துவிளக்கு ஏற்றிய பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது, தமிழ்ச் சங்கத்தின் துணைப் பொருளாளர் திரு குமாராராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார் அதனைத் தொடர்ந்து தலைவர் திரு போஸ் அவர்களது சிறப்புரை ஆற்றினார்.
வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கம், மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் ஒளவை தமிழ் வாழ்வியல் மாநாட்டில் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட சிறந்த தமிழ்ச் சங்கத்திற்கான விருதை பொதுச் செயலாளர் திரு ராஜ்குமார் அவர்கள் திரு போஸ், திரு தருமசீலன், திரு. நேரு சாஸ்திரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பின்னர் முதல் நிகழ்ச்சியாக திருமதி. ஜெயகவி அவர்களின் அகம் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ-மாணவிகளின் கண்கவர் பரதநாட்டியம் அனைவரையும் உற்சாகப்படுத்தியது, தொடர்ந்து முன்னாள் இராணுவ வீரர் திரு. அசோக்குமார் அவர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் மிக முக்கியமாக கார்கில் போரின் போது தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது அவையோரை நெகிழ செய்தது. இதனையடுத்து செல்வி நீஷாவின் எழுச்சி மிகு சுதந்திர தின உரை, தமிழ் பாரம்பரிய நாட்டுப்புற கலையான களரியை நீந்தி, ரிவித்தா, ஆரோவ் நிகழ்த்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர். தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஆடல் பாடல் என பல்சுவை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அரங்கேறியது. சிறப்பு கோலப் போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் படம் பதித்த கேடயம் பரிசாக வழங்கப்பட்டது, மேலும் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய திருமதி. அருணா குமாரராஜன், தி சென்னை சில்க்ஸ் நிர்வாகி திரு ஜோசப் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் செயற்குழு உறுப்பினர் திரு. உமாகணேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார், நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் திரு ராஜன்முத்துசுவாமி, திரு.வாசன், திரு சரவணன் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
15-09-2022- நம் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பாளர்களான (One of the Sponsor for TTS) ஐதராபாத், குட்கட்பள்ளியில் உள்ள தி சென்னை சீல்க்ஸ் கிளை தமது 6ம்
ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது, இதில் நம் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு எம்.கே. போஸ் மற்றும் துணை தலைவர் திரு. தருமசீலன் அவர்கள் கலந்து கொண்டு அதன் நிர்வாகிகள் திரு. மகேஷ் மற்றும் திரு. ஜோசப் அவர்களுக்கு நம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழ்ந்து தெரிவித்தனர்.
16-09-2022 - ஐதராபாத் குட்கட்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்டது கல்யாண் ஜுவல்லர்ஸை நமது தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு எம்.கே.போஸ் அவர்கள் திறந்து வைத்து விற்பனையை துவங்கி வைத்தார்கள். உடன் நமது தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு தருமசீலன் மற்றும் பொருளாளர் திரு நேரு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
19-09-2022 - உலகத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தை இணைத்தது. உலக தமிழ் அமைப்பில் இணைந்து உலக அளவில் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து பல்வேறு ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொள்ள நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தெலுங்கானா வாழ் தமிழர்களுக்கு அவ்வப்போது தேவையான உதவிகளை செய்ய ஏதுவாக அமையும்.
24-09-2022 - தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடக்கம், தமிழக அரசுக்கும் மற்றும் தமிழ்ப் பரப்புரைக் கழகத்திற்கு தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
28-09-2022 - ஐதராபாத் வாசிகளின் நலன் கருதி சென்னை-ஐதராபாத் இடையே இயங்கும் சார்மினார் ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீடிக்க கோரிக்கை கடிதம்.
தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான நம் தமிழ் உறவுகளின் நீண்ட நாள் கோரிக்கையான சார்மினார் விரைவு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ஆவன செய்ய வலியுறுத்தி நம் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் மத்திய ரயில்வே அமைச்சர், தெலுங்கானா ஆளுநர், தெற்கு இரயில்வே இயக்குநர், தெற்கு மத்திய இரயில்வே இயக்குநர், மத்திய சுற்றுலா அமைச்சர், மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதனை வலியுறுத்தி மேற்கண்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை நம் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கியது.